சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 98.96 ரூபாய் எனவும், டீசல் லிட்டருக்கு 93.93 ரூபாய் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.46 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை மாற்றமின்றி அதே விலையிலும் டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.93.93 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை மாற்றமின்றி இருக்க டீசல் விலை நாள்தோறும் விலையுயர்த்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.




