சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.34,952-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்திய குடும்பங்களில் தங்கத்தில் முதலீடு செய்வது சேமிப்பாகவே கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாவே தங்கம் விலை குறைந்து வந்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்து வந்த நிலையில், இன்று சற்றே விலை உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.34,952-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.4,369க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.64,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.