தங்கம் விலையானது ஒரு புறம் வரலாறு காணாத புதிய உச்சத்தினை தொடர்ந்து தொட்டு வருகின்றது. இதற்கிடையில் தங்கம் இறக்குமதியும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகின்றது.

இந்த நிலையில் இன்று உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் படி, தங்க ஆபரணத் தேவையானது ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டு வரையில் 74% வீழ்ச்சி கண்டு 44 டன்னாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் சீனாவில் 33 சதவீத வீழ்ச்சியடைந்து 90.9 டன்னாக குறைந்துள்ளது.

ஆக மொத்தத்தில் உலகின் இருபெரும் முக்கிய நுகர்வோரின் தேவையும் 53 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சமீபத்திய காலாண்டில் உலகளாவிய தேவையானது 251.5 டன்னாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. 2020ம் காலாண்டர் ஆண்டில் உலகளாவிய தங்கத்திற்கான தேவை கிட்டதட்ட பாதியாகி விட்டது.

தங்கம் விலை அதிகரிப்பு- தேவை இல்லை
இது 46% வீழ்ச்சி கண்டு, 572 டன் என்ற அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தங்கத்தின் விலையில் வலிமை இருந்தாலும், அந்தளவுக்கு ஆபரண தங்கத்திற்கான தேவை இல்லை என்றே கூறலாம். சீனாவும் இந்தியாவும் நடப்பு ஆண்டின் முதல் பாதியில் தங்கம் பங்களிப்பில் பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளன. அதிலும் தங்க ஆபரண சந்தையினை பொறுத்த வரையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அக்ஷ்ய திருதியையின் போது லாக்டவுன் அதிலும் இந்தியாவின் தங்க நகை வாங்கும் ஆபரண விழாவாக கொண்டாடப்படும், அக்ஷய திருதியையின் போதே, சரியாக லாக்டவுனும் அமல்படுத்தப் பட்டதால் விற்பனை வெகுவாக முடங்கியது. எனினும் ஆன்லைன் விற்பனை செய்யப்பட்டாலும் அது அந்தளவுக்கு கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.

தேவை மீண்டு வருகிறது எனினும் தற்போது சில இடங்களில் லாக்டவுனில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், தங்க ஆபரண தேவையும் மீண்டு வர ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எப்படி இருப்பினும் நடப்பு ஆண்டில் முதல் பாதியில் தங்க ஆபரணத்தின் தேவையானது முடங்கியது. சீனாவின் பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள் உயர்ந்து வரும் விலைகளால், அதே சமயம் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எடை குறைவான ஆபரண தயாரிப்புகளில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனராம்.

இது நல்ல விஷயம் தான் எனினும் இதில் ஒரு நல்ல விஷயம் என்னவெனில் அரசு தங்கம் இறக்குமதியை குறைப்பதாக இறக்குமதி வரி அதிகரிப்பு, ஜிஎஸ்டி அதிகரிப்பு என பல அதிரடியான நடவடிக்கையெல்லாம் எடுத்தது. ஆனால் அப்போதெல்லாம் குறையாத தங்கம் இறக்குமதியானது, கொரோனாவால் குறைந்துள்ளது. உண்மையில் உலக தங்கம் கவுன்சில் ஒரு நல்ல விஷயத்தையினையும் கூறியுள்ளது.