
பிரபல காதல் ஜோடி ரன்பீர் – ஆலியா பட் இவர்களுக்கு நவம்பர் 6-ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்கள் பெண் குழந்தையுடன் எடுக்கப்பட்ட படங்களும் செய்திகளும் பாலிவுட் ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இடம்பெற்றன. இந்நிலையில் தற்போது தனது குழந்தைக்கு ராஹா எனப் பெயரிட்டுள்ளதாக ஆலியா பட் சமூக வலைதளங்களில் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள ஆலியா, “ரஹா (அவளது புத்திசாலி மற்றும் அற்புதமான பாட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்) என்ற பெயருக்கு பல அழகான அர்த்தங்கள் உள்ளன… ரஹா, தூய்மையான வடிவத்தில் தெய்வீக பாதை என்று பொருள். சுவாஹிலி மொழியில் மகிழ்ச்சி, சமஸ்கிருதத்தில், ராஹா ஒரு குலம், பெங்காலியில் – ஓய்வு , ஆறுதல், நிவாரணம். அரபு மொழியில் அமைதி. மகிழ்ச்சி, சுதந்திரம் மற்றும் பேரின்பம் என்றும் இந்த பெயர் பொருள்படும்.
அவளுடைய பெயருக்கு உண்மையான அர்த்தத்தை, நாங்கள் அவளை பெற்ற முதல் நொடியிலிருந்து உணர்ந்தோம்! எங்கள் குடும்பத்தை உயிர்ப்பித்ததற்கு நன்றி ராஹா. நம் வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது போல் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.