தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகர் ஆனவர் தனுஷ் ஆரம்பத்தில் அவரின் நடிப்பை யாரும் கண்டுகொள்ளவில்லை, அடுத்ததாக வந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தனது நடிப்பை வெளியுலகுக்கு நிரூபித்தார், தொடர்ந்து தன் அண்ணன் நடிப்பில் நடித்த தனுஷ் சுப்பிரமணி சிவா நடிப்பில் நடித்த படம் தான் “திருடா திருடி”இந்த படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் மன்மத ரசவாக குடிவந்தார்.

அதன் பிறகு சிறிது காலம் ஒரே மாதிரியான கதை அம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறார் என்ற குற்றசாட்டு இருந்தது, பின்னர் பாலுமகேந்திர இயக்கத்தில் “அது ஒரு கனா காலம்”என்ற படத்தில் நடித்தார் இந்த படம் வியாபார ரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும், விமர்சன ரீதியாக மாபெரும் பெயர் வாங்கி கொடுத்தது அதன் பிறகு அவர் ஆஸ்தான குருவான தன் அண்ணன் இயக்கத்தில் “புதுப்பேட்டை” படத்தில் நடித்தார்.
இப்படமும் வியாபாரரீதியாக பெரிய வெற்றி இல்லை என்றாலும், தனுஷின் மைல்கல் படத்தில் இதுவும் ஒன்று.
புதுப்பேட்டை படத்திற்கு பிறகு மீண்டும் தனக்கு ஒரு கமெர்சியல் வெற்றி வேண்டும் என தனக்கு “தேவதையை கண்டேன்” என்ற வெற்றியை கொடுத்த பூபதி பாண்டியன் இயக்கத்தில், திருவிளையாடல் ஆரம்பம் என்ற படத்தில் நடித்தார் இந்த படம் ஒரு நல்ல வெற்றியை தனுசுக்கு தந்தது.இதன் தன்னை திரையுலகில் நிலைப்படுத்தி கொண்டார்.
அது ஒரு கனா காலம் படத்தில் பாலு மகேந்திராவின் உதவி இயங்குநராக பணியாற்றியவர் வெற்றிமாறன் அந்த படத்தின் மூலம், தனுசுக்கு நல்ல நண்பர் ஆனார், அவர்தான் தனுஷை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனவர் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய நான்கு படங்களிலும் தனுஷை வித்தியாச நடிகராக காண்பித்தவர், அதிலும் அசுரன் அவர் திரைதுறையில் அதிக வசூல் செய்த படமாகும்.

அவ்வப்போது ஒரு மாஸ் அப்பறம் ஒரு கிளாஸ் என்ற சம விகிதத்தில் அதாவது கொடி, மயக்கம் என்ன, வேலையில்லா பட்டதாரி,மாரி போன்ற படங்களில் நடித்து கொண்டு இருந்த தனுஷ், தயாரிப்பு,மற்றும் இயக்குனர் பணியிலும் சிறந்து விளங்கினார்.இவர் தயாரிப்பில் வெளிவந்த “காக்க முட்டை “படம் தேசிய விருது பெற்றது, மேலும் தன் இயக்கத்தின் மூலம் “பவர் பாண்டி”என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.

மேலும் தன் தயாரிப்பு நிறுவனம் மூலம் சிவகாத்திகேயன், அனிரூத் போன்றவர்களை அறிமுகம் செய்து வைத்தார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடித்து கொண்டு இருக்கிறார் படம் இறுதி கட்ட வேளையில் உள்ளது கொரோனா வால் தள்ளி போகிறது. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் படத்தின் பணிகள் தொடங்கும்.
இவ்வாறு தனி தன்மை பல வாய்ந்த தனுஷ் நடித்த “மாரி 2″படத்தின் பாடல் ஒரு புதிய மயில் கல்லை எட்டியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் அனைத்து மக்களையும் கவரும் வண்ணம் இருந்தது.

குறிப்பாக “ரௌடி பேபி “பாடல் வந்த போதே “யூ டியூபில்”பல சாதனைகளை பெற்றது இன்று புதிய சதானையாக 900 மில்லியன் பார்வையலாளர்களை எட்டியுள்ளது. இதை யுவன் ஷங்கர் ராஜா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், மேலும் இன்னும் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றால் 1ட்ரில்லியன் பார்வையாளர்களை பெரும் முதல் இந்திய பாடல் என்ற பெருமையை பெரும், இதனால் தனுஷின் ரசிகர்கள் இதை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.