Smart phoneல் இருந்து super Computer வரை அனைத்தும் நம் கைகளுக்குள் அடங்கிட வேண்டும் என்றும் அதே சமயம் அதிக சேமிப்புத் திறனுடனும் இருக்கவேண்டும் என நாம் நினைக்கிறோம். நமது நவீன அறிவியல் தொழில்நுட்பம் இதை சாத்தியப்படுத்தியுள்ளது என்றே சொல்லவேண்டும். ஒரு சில KB அளவுள்ள சேமிப்புத் திறன் கொண்ட கருவிகளை வண்டியில் வைத்து ஏற்றிக்கொண்டு வந்த காலம் போய் தற்போது பல நூறு gbஅளவுள்ள தகவல் சேமிப்புக்கருவிகள் நம் கைக்குள் அடங்கி விட்டன. தற்போது இத் தொழில்நுட்பம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் உலகில் 15இடங்களில் தங்கள் தகவல் சேமிப்பு மையத்தை நிறுவியுள்ளது. கூகுள் Search engineஐ பயன்படுத்தி ஒரு நொடிக்கு சுமார் 4கோடி தேடுதல்கள் செய்யப்படுகின்றன. இது ஒரு வருடத்திற்கு 1லட்சத்து 20ஆயிரம் கோடி தேடுதல்களாகிறது. இந்த தகவல்களை சேமிக்க 15மையங்களில் மொத்தம் இரண்டரை கோடி சர்வர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு சர்வரும் பல ஆயிரம் GB தகவல்களை சேமிக்கும் திறன் கொண்டவை. ஒவ்வொரு சர்வரிலிருந்தும் அதிகளவிலான வெப்பம் வெளியேற்றப்படுவதுடன் மின்சாரமும் பல கோடி யூனிட்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மாதிரியான பிரம்மாண்டமான நிறுவனங்களின் மூலமாகவே 2சதவிகதம் Green House Gases எனப்படும் புவி வெப்பமையமாதலுக்கு காரணமான வாயு வெளியேற்றப்படுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தகவல் சேமிப்பில் உள்ள இடப்பற்றாக்குறையே இதற்கு காரனமாக பார்க்கப்படுகிறது. தற்போது இதற்கு தீர்வு காணும் விதமாக Manchester பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் Single Molecule Magnetsஎனப்படும் மூலக்கூறுகளில் மிக அதிகளவிலான தகவல்களை சேமிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். காந்த ஆற்றலால் கட்டுப்படக்கூடிய இரும்பு போன்ற பொருட்களை காந்தபுலத்தின் நடுவில் வைக்கும் போது அவற்றின் அணுக்களும் ஒரு காந்தத்தைப் போலவே செயல்பட ஆரம்பிக்கின்றன.
இன்னும் எளிதாகக் கூறவேண்டும் என்றால் இந்த மூலக்கூறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சதுர Inchக்குள் 200Terabit அளவுள்ள தகவல்களை சேமிக்க முடியும். அதாவது 25,000GB அளவுள்ள தகவல்களை 50பைசா நாணயம் அளவுள்ள சேமிப்புக் கருவியில் சேமிக்க முடியும். கோட்பாட்டு ரீதியாக பார்க்கும் போது மூலக்கூறு தொழில்நுட்பத்தின் மூலம் தற்போது பயன்படுத்தும் தகவல் சேமிக்கும் கருவிகளை விட 100 மடங்கு சிறியதாக கருவிகளை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது முன்னேறி வரும் இந்த Single molecule magnetsமூலம் இந்த நிலைமை மாறும் என நாம் எதிர்பார்க்கலாம்.