தனுஷ், செல்வராகவன், யுவன் இந்த ஹிட் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

‘கர்ணன்’, ‘அத்ராங்கிரே’, ‘டி43’ படங்களை அடுத்து தனுஷ் மீண்டும் இயக்குநர் செல்வராகவனுடன் இணைந்துள்ளார். படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
READ MORE- மீண்டும் தொடங்கும் சிம்புவின் ‘மஃப்டி’ ரீமேக். டைட்டில் அறிவிப்பு எப்போது?
‘7ஜி ரெயின்போ காலனி’, ‘காதல் கொண்டேன்’ படங்களுக்கு பிறகு செல்வராகவன் – யுவன் கூட்டணி 8 வது முறையாக இணைகிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் செல்வராகவன்.
அதேபோல, இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார். ‘அசுரன்’, ‘கர்ணன்’ படங்களை தொடர்ந்து தனுஷ் மூன்றாவது முறையாக தாணு தயாரிப்பில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், ‘எங்கிருந்து யாருடன் ஆரம்பித்தேனோ மீண்டும் அங்கேயே இணைகிறேன். இந்த முறையாவது அவரை நடித்து இம்ப்ரஸ் செய்வேன் என நம்புகிறேன்’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.




