நடிகர் சந்தானத்தின் மகன் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சந்தானத்தின் மகன் நிபுன் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
’மஞ்சப்பை’, ‘கடம்பன்’ ஆகிய படங்களை இயக்கிய ராகவன் அடுத்து பிரபுதேவாவை வைத்து இயக்க இருக்கிறார். அந்த வகையில், ஆதிக் ரவிச்சந்திரனின் ‘பஹிரா’ படத்துக்கு பிறகு பிரபுதேவா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்தான் சந்தானத்தின் மகன் நிபுணன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறாராம். இதில் நிபுனனை சுற்றியே கதை இருக்கும் எனவும் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.
READ MORE- சிம்பு கதையில் விஜய்?
மகன் ஒரு பக்கம் சினிமாவில் அறிமுகமாகிறார் என்றால் சந்தானம் இன்னொரு பக்கம் ‘டிக்கிலோனா’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக கவனம் செலுத்தி வருகிறார்.




