நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை திடீரென்று சந்தித்துள்ள விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தளர்வுகளுக்கு பிறகு 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் திரையரங்குகள் திறக்கப்பட்டது. ஆனால்100% பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என ஏற்கனவே ‘மாஸ்டர்’ படக்குழு சார்பாக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
READ MORE- சிம்புவுக்கு குட்டி ரசிகர் கொடுத்த முத்தம்!- வைரலாகும் வீடியோ!
அதேபோல அதிகாலை மற்றும் நள்ளிரவு ஷோக்களுக்கு அனுமதி வேண்டும் என இண்டஹ் கோரிக்கைகளை முன்வைத்து இதற்கு தீர்வு எட்ட அமைச்சர் வேலுமணி மூலம் முதல்வரை சந்தித்து பேசியுள்ளாராம் விஜய்.
‘மாஸ்டர்’ திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் முன்பு 100% சதவீத பார்வையாளர்கள் என்ற இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என சொல்லியுள்ளாராம் விஜய். விரைவில் முதல்வரிடம் இருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கும் என்கின்றன நெருங்கிய வட்டாரங்கள்.