‘லாபம்’ படம் ஓடிடியில் முதலில் வெளியாகிறது என தகவல் பரவ அது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விஜய்சேதுபதி.
விஜய் சேதுபதி, ஷ்ருதிஹாசன் என பலரும் நடித்திருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி. ஜனநாதன் இந்த படத்தை இயக்குகிறார்.
கொரோனா லாக்டவுணுக்கு பிறகு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. அந்த வகையில் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருப்பதாக படத்தின் தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தது. இதனை பலரும் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என தவறாக புரிந்து கொண்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழுவினர் அதற்கான விளக்கம் கொடுத்துள்ளனர்.
READ MORE- ‘கர்ணன்’ படப்பிடிப்பு முடிந்தது!
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் விஜய் சேதுபதி தெரிவித்திருப்பதாவது, ‘படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவில்லை. நிச்சயம் தியேட்டரில் வெளியான பின்புதான் ஓடிடியில் வெளியாகும். படத்தின் ஓடிடி உரிமம் மட்டும்தான் நெட்ஃபிலிக்ஸ் வாங்கியுள்ளது என அறிவித்துள்ளோம்’ என விளக்கம் தெரிவித்துள்ளார்.
படம் தியேட்டரில் எப்போது நேரடியாக வெளியாகும் என்பது பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ த்கவல் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.