’மாஸ்டர்’ படம் வெற்றி குறித்து நடிகர் விஜய்சேதுபதி மனம் திறந்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ‘மாஸ்டர்’ படம் வெற்றி குறித்து நடிகர் விஜய்சேதுபதி மனம் திறந்துள்ளார்.
அந்த வகையில், ‘’மாஸ்டர்’ பட வெற்றிக்கு முழு காரணம் நடிகர் விஜய்தான். அவருக்காகவே தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள்தான் இங்கு அதிகம்’ எனவும் கூறியுள்ளார்.
அதேபோல, ‘800’ திரைப்படத்தில் இருந்து விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட, ‘முடிந்து போன விஷயத்தை கிளற வேண்டாம். இதற்கு பல முறை நான் பதிலளித்து விட்டேன். வேறு கேள்வி ஏதேனும் இருந்தால் கேளுங்கள்’ என காட்டமாக பதிலளித்துள்ளார்.
விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து ‘துக்ளக் தர்பார்’, ‘மாமனிதன்’, ‘லாபம்’, ‘கடைசி விவசாயி’ என பல படங்கள் வெளிவர காத்திருக்கிறது.
READ MORE- இயக்குநர் தேசிங்கு ராஜா- நிரஞ்சனி திருமணம் எப்போது?
இதுமட்டுமில்லாமல், இந்தி மற்றும் ஓடிடிக்கான ஆந்தாலஜி படங்களிலும் விஜய்சேதுபதி பிஸியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.