நடிகர் விஷால்மற்றும் அவரது தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோருக்கு சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழ் சினிமாவில் நடிகர் விஷால்மற்றும் அவரது அப்பா தயாரிப்பாளர் ஜி. கே. ரெட்டி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று நலம் அடைந்து விட்டதாக கூறப்படுகிறது. முதலில் விஷாலின் அப்பாவுக்குத் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரிடமிருந்து விஷாலுக்கும் அது பரவியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார்.கொரோனா பாதிப்புக்கு அவர், ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டார். இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளது.இருப்பினும், அவர் தொடர்ந்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .