மலையாள சினிமா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தாலும் மாளவிகா மோகனனுக்கு பெயரையும், புகழையும் அள்ளிக்கொடுத்தது என்னமோ தமிழ் சினிமா தான். ‘அடிச்சது ஜாக்பாட்’ என்பது போல் அம்மணிக்கு முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அமைந்தது. பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், கதை முழுவதுமே இவரை சுற்றித் தான் அமைந்திருக்கும்.

அடுத்ததாக லக்கி ப்ரைஸாக தளபதி விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்து அசத்தினார். மாமனார் ரஜினிகாந்தை தொடர்ந்து தற்போது மருமகன் தனுஷ் உடன் 3வது படத்தில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகளை தட்டித்தூக்க வேண்டும் என்பதற்காக பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வருகிறார்.

சோசியல் மீடியாவில் மாளவிகா மோகனன் வெளியிடும் போட்டோக்கள் அனைத்தும் வேற லெவலுக்கு வைரலாகி வருகிறது. ஸ்டாரப்லெஸ் ஜாக்கெட், புடவையில் மேலாடையை நழுவ விட்டு உச்சகட்ட கவர்ச்சி காட்டியிருக்கிறார் மாளவிகா மோகனன், இந்த ஓவர் கிளாமர் போட்டோஸ் தற்போது தாறுமாறு வைரலாகி வருகிறது.




