சினிமாவில் வாய்ப்புகள் குறைந்த நிலையில், ஓடிடியில் வெளியாகும் இணைய தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகை பிரியா ஆனந்த்.
கடந்த 2009ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாலும், 2013ம் ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எதிர்நீச்சல் படம் மூலம் பிரபலமானவர் பிரியா ஆனந்த்.
அதைதொடர்ந்து, வரிசையாக வாய்ப்புகள் குவிய வணக்கம் சென்னை, அரிமா நம்பி, இரும்புக் குதிரை, வை ராஜா வை, எல்.கே.ஜி, ஆதித்ய வர்மா ஆகிய படங்களில் நடித்தார்.
தமிழ் மட்டிமின்றி தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ள பிரியா ஆனந்த், ஆரம்பத்திலிருந்தே கதைக்கு தேவையான அளவிற்கு கவர்ச்சியை கொட்டவும் பஞ்சம் வைத்ததில்லை.
தொடர்ச்சியாக படங்கள் வெளியே வந்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அவை வெற்றி படங்களாக அமைவயவில்லை. இதன் காரணமாக அவருக்கான பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், தனது இரண்டாவது இன்னிங்சை, தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ள இணைய தொடர் மூலம் தொடங்க உள்ளார் பிரியா ஆனந்த்.
சிம்பிள் மர்டர்’ (Simple murder) என்னும் இணையத்தொடரில், சச்சின் பதக் இயக்கத்தில் ப்ரியா ஆனந்த் தற்போது நடித்து வருகிறார். இந்தத் தொடர் விரைவில் சோனி ஸ்ட்ரீமிங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் உருவாகி வரும் இந்த தொடர் விரைவில் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகும் என கூறப்படுகிறது.