நடிகை பிரியா பவானி சங்கர் நீச்சலுடையில் இருக்கும் படங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் முகம் சுளித்துள்ளனர்.

டி.வி. தொகுப்பாளினியாக இருந்த பிரியா பவானி சங்கர், அதன் பிறகு மேயாத மான், மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றார். தற்போது அவரது கைவசம் 3 படங்கள் உள்ளன.
இந்நிலையில் துபாய் சென்றுள்ள நடிகை பிரியா பவானி, நீச்சல் குளத்தில் குளிப்பது போன்ற சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், லட்சக்கணக்கான லைக்ஸ்களை அள்ளி உள்ளது.
ஆனால் மற்ற நடிகைகளைப் போல நீங்களும் ஆரம்பிச்சுட்டீங்களா என்று நெட்டிசன்கள் அவரை வசைபாடி வருகின்றனர்.




