கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியில் வெளியாகிய படம் ‘ஆர்டிகிள் 15’ இந்தியில் புதுவிதமான கதைக்களத்துடன் வந்த இத்திரைப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
அனுபவ் சின்ஹா இயக்கி தயாரித்திருந்த இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா, இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக்கை அஜித்தை வைத்து நேர்கொண்டபார்வை மற்றும் தற்போது அஜித் நாடிக்கொண்டு இருக்கும் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கைப்பற்றினார்.அதனால் அந்த படத்திலும் அஜித்குமார் தான் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்தன.
ஆனால் ஏற்கனவே வலிமை படத்தில் அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்ததால் அந்த படத்தை நிராகரித்தார் என்ற தகவல் வந்தது.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி அன்று ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கேரக்டரில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தை போனி கபூர் மற்றும் ஜீ5 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.விரைவில் இத்திரைப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொரோனா பிரச்சனை முடிந்த பின்னர் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.