பிக்பாஸ்ஸின் இன்றைய முதல் புரோமோவில் ரியோ டாஸ்க்கில் முன்னிலையில் இருக்கிறார்.

பிக்பாஸ்ஸில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் நேற்று நடந்த டாஸ்க் வரைக்கும் ரம்யா முன்னிலையில் இருக்கிறார்.
இப்போது வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு வளையம் கொடுத்து பந்தை அதில் சுற்ற சொல்லியிருக்கிறார்கள். இதில் வளையம் சுற்றுவது நின்று விட்டாலே அல்லது பந்து கீழே விழுந்து விட்டாலோ அவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.
READ MORE- விஜே சித்துவுக்கு போதை பழக்கம்? திசை மாறும் விசாரணை!
இதில் ஷிவானி, கேபி, ரம்யா, ஆரி இவர்களின் பந்துகள் விழுந்து விட இறுதியில் சோம், ரியோ மற்றும் பாலா இருக்கிறார்கள். இதில் சோம் ஒரு கட்டத்தில் பால் மட்டும்தானே கீழே விழக்கூடாது என கேள்வி கேட்டு நிறுத்தி விட அவரும் அவுட். அடுத்து பாலாவின் பந்தும் கீழே விழ இறுதியில் ரியோ போட்டியை வெல்கிறார்.




