பிக்பாஸ் வீட்டின் இந்த வார நாமினேஷனில் இரண்டு வலிமையான போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர்.

பிக்பாஸின் போன வார நாமினேஷனில் பாடகர் வேல்முருகன் வெளியேறி இருக்கிறார்.
இந்நிலையில் இந்த வார எவிக்சனுக்காக ஹவுஸ்மேட் பலரால் ஆரி மற்றும் அர்ச்சனா தேர்ந்து எடுக்கப்பட்டது போல் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த பிக்பாஸ் சீசனை பொறுத்த வரை ஆரி மற்றும் அர்ச்சனா இருவருமே கடுமையான போட்டியாளர்கள் தான்.
அர்ச்சனா சின்னத்திரையை பொறுத்த வரை மிகவும் பிரபலமான தொகுப்பாளினி. மற்ற தொகுப்பாளர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி தொகுப்பாளர். இவருக்காகவே ஒரு நிகழ்ச்சியை பார்க்கும் அளவிற்கு ரசிகர்களை கொண்டவர். இவர் பிக்பாஸ் வீட்டினுள் நுழையும் போது ரசிகர்களின் அமோக ஆதரவோடு சென்றவர். அதே ஆதரவு இவருக்கு இப்போதும் இருக்கிறதா எனக் கேட்டால் கொஞ்சம் சந்தேகம் தான். ஒரு சில விஷயங்களை இவர் அணுகும் முறை சற்று முகச்ச்சுளிப்பையே கொடுக்கிறது.
நெடுஞ்சாலை மாயா போன்ற திரைப்படங்களில் நடித்தவர். ஆரி தன்னால் முடிந்தவரை மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் மிகவும் சிறந்தவர் மனதில் தோன்றியதை சிறிதும் யோசிக்காமல் வெளியில் சொல்லும் அளவிற்கு நேர்மையானவர் போட்டியாளர்கள். இவரை தட்டி விட நினைத்தாலும் வெளியே மக்களிடையே இவருக்கு மிகப்பெரிய ஆதரவு கூடிக்கொண்டே தான் இருக்கிறது. எனவே நாமினேஷனில் ஆரி வந்தாலும் அவர் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு இல்லை.
பிக்பாஸ் வீட்டை பொறுத்த வரை கண்டன்ட் கொடுக்கும் போட்டியாளர்களை இவ்வளவு சீக்கிரம் வீட்டை விட்டு அனுப்ப மாட்டார்கள். எனவே அர்ச்சனா வெளியில் செல்வதற்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. எனவே இவர்களை தவிர்த்து மூன்றாவது போட்டியாளர் ஒருவரே வீட்டை விட்டு வெளியேறுவார். இன்னும் நாமினேஷனில் யார் யார் இருக்கிறார்கள் என இனி வரும் ப்ரோமோக்களில் தெரிந்து விடும்.
நேற்று புதிதாக பிக்பாஸ் வீட்டினுள் வைல்டு கார்டு எண்ட்ரியாக வந்த சுசித்ரா அர்ச்சனாவை நாமினேட் செய்தார், இனிவரும் காலங்களில் இவர்கள் இருவருக்குள்ளும் ஏதேனும் பிரச்சனைகள் வரலாம்.




