பிக்பாஸ் நான்காவது சீசனுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நான்காவது சீசனுக்கான முதல் ப்ரோமோ மாஸ்டர் பட பாடலுடன் இன்று காலை வெளியாகிவிட்டது. இனி பிக்பாஸ் ப்ரோமொக்காக காத்திருப்பதே நமக்கெல்லாம் வழக்கமாகி விடும். ரசிகர்களை கவரும் வகையில் இணையதளத்தில் பட்டைக் கிளப்பி வரும் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அனைவரும் காலையில் ஆடுவது போன்று வீடியோ வெளியாகி #vaathicoming என்று வைரலாகி வருகிறது. மாஸ்டர் ஆடியோ லாஞ்சின் போது தளபதி விஜய், சாந்தனு, மற்றும் அனிருத் மூவரும் இந்த பாடலுக்கு மேடையில் நடனமாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.