பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோவில் வழக்கம் போல ரியோராஜ்க்கும் சுரேஷ்ச்சக்ரவர்த்திக்கும் கருத்து மோதல் ஏற்படுவது போல் காட்டப்பட்டுள்ளது.
ரியோராஜ் பிக்பாஸ் போட்டியாளராக வீட்டினுள் நுழையும்போதே சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. உள்ளே வந்து சில நாட்களில் எதிலும் ஈடுபடாமல் சிரிப்பும் சந்தோஷமாகவே இருந்தார். ஆனால் கடந்த சில நாட்களாகவே ரியோவுக்கும் சுரேஷ் சக்ரவர்த்திக்கும் இடையே கருத்து மோதல் இருந்து கொண்டே வருகிறது.
சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டினுள் வம்பிழுக்காத ஆளும் இல்லை அவர் இல்லாத ப்ரோமோவும் இல்லை. பிக்பாஸ் கொளுத்தி போடுகிறாரோ இல்லையோ சுரேஷ் சக்ரவர்த்தி நன்றாகவே வெடிக்கிறார்.
இன்றைய ப்ரோமோவில் கேம் டாஸ்க் விளையாடப்படும் போது சுரேஷ் சக்ரவர்த்திக்கும் ரியோராஜ்க்கும் மீண்டும் ஏதோ கருத்து மோதல் ஏற்படுவதாக காட்டப்பட்டுள்ளது.
ஆனால் பிக்பாஸில் எப்போதுமே முதலில் இரண்டு பெண்களுக்கு நடுவே சண்டை ஆரம்பிக்கும் இம்முறை அதை மாற்றும் விதமாக ஆண்கள் மோதிக்கொள்கிறார்களோ?