உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 வரும் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என விஜய் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் பிக்பிரதர் நிகழ்ச்சியின் தழுவலாக வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் மிக பிரபலம் ஆயிற்று. தமிழ் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.
பிக்பாஸ் முதல் சீசனில் ஆரவ், ஓவியா, காயத்ரி, ஜூலி, ஆர்த்தி, கணேஷ் வெங்கடராமன், சினேகன், வையாபுரி, பழனி, கஞ்சா கருப்பு, ஹரிஷ் கல்யாண், ஷக்தி, நமிதா, ரைசா, சுஜா, என பலரும் பங்கேற்றனர். இந்த சீசனில் தான் ஓவியாவிற்காக ஆர்மி எல்லாம் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் வெற்றியை தொடர்ந்து சீசன்2, 3 வந்தது. முதல் சீசனில் ஆரவ் வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு மற்றும் மூன்றாம் சீசனில் முறையே ரித்விகாவும் முகினும் வெற்றிபெற்றனர்.
சீசன் 4 நான்கு கடந்த ஜூலை மாதம் தொடங்க பட்டிருக்க வேண்டும், கொரோனா தாக்கத்தால் தற்பொழுது இந்த சீசன் அக்டோபர் 4 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பபட்டுள்ளனர்.