பல எதிர்பார்ப்புகளுக்கிடையே பிக்பாஸ் நான்காவது சீசன் இன்று மாலை ஒளிபரப்பட இருக்கிறது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் சின்னத்திரை மற்றும் பெரியத்திரை படப்பிடிப்புகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு இப்பொழுது படப்பிடிப்புகள் அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி நடைப்பெற்று வருகிறது.
மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட நம் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் இன்று ஒளிபரப்பப்பட உள்ளது. அரசாங்க விதிமுறைகளின் படி மற்ற மூன்று சீன்களில் இல்லாத மாற்றங்கள் என்னவெல்லாம் இந்த சீசனில் எதிர்பார்க்கலாம்
அர்ச்சனா (தொகுப்பாளர்) , அனிதா சம்பத் (செய்தி வாசிப்பாளர்), ரம்யா பாண்டியன்(குக் வித் கோமாளி), ரியோ ராஜ் (தொகுப்பாளர் மற்றும் நடிகர்), ஷிவானி நாராயணன் (சின்னத்திரை நடிகை), ரேகா (நடிகை), கேய்ப்பிரியல்லா (விஜய் டிவி), சனம் ஷெட்டி (மாடல் மற்றும் நடிகை), அணு மோகன் (இயக்குனர்), ஆரி அர்ஜுன் (நடிகர்), ஆஜித் (பாடகர்), அறந்தாங்கி நிஷா (பேச்சாளர், தொகுப்பாளர், மற்றும் நடிகை) மற்றும் இரண்டு மாடல்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1.மற்ற மூன்று சீசனில் நடைபெறாத ஒன்று கொரோனா முன்னெச்சரிக்கையாக, போட்டியாளர்கள் நட்சத்திர ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
2.கொரோனாக் காலத்தில் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்கத்தால் முன்னெடுத்து வைக்கப்படுவது முகக்கவசம் தான். போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் மொத்தமாக அமரும் நேரத்தில் முகக்கவசம் அணிந்திருப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
3.பிக்பாஸ் ப்ரோமோவிலேயே கொரோனா விழிப்புணர்வு செய்தி இருந்தது, எனவே நிகழ்ச்சி முழுக்க கொரோனா விழிப்புணர்வு செய்திகள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
4.பிக்பாஸ் மொத்தமாக 100 நாட்கள் நடக்கும் தற்போது இது 60 நாட்களாக குறைக்கப்படுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது, இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
5.போட்டியாளர்களின் படுக்கையறைகள் மிகவும் நெருக்கமாகவும் ஏசி வசதியுடனும் இருக்கும். இது கொரோனாக் காலத்தில் பாதுகாப்பானதாக இருக்காது. எனவே படுக்கையறையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கலாம்.
6.ஒரு தடவை நெகடிவ் என வந்தவர்களுக்கு மீண்டும் பாசிட்டிவ் வர வாய்ப்புகள் அதிகம், எனவே பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி கொரோனா பரிசோதனை எடுக்கப்படலாம்.
7.வாரம் ஒரு முறை கமல்ஹாசனின் கேள்வி நேரத்தில் பலதரப்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்பார்கள். தற்போது நோய்த்தொற்று காரணத்தால் இதற்கு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படலாம்.
8.நிகழ்ச்சி முடியும் தருவாயில் போட்டியாளர்களின் வீட்டிலிருந்து அவர்களைக் காண உறவினர்கள் நண்பர்கள் வருவார்கள். இது மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் எபிசொட். இது இந்த கொரோனா காலத்தில் எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை, ஏனெனில் வெளியில் இருந்து வருபவர்களால் வீட்டுக்குள் தொற்று பரவ வாய்ப்பிருக்கிறது.
ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு விஜய் டிவியில் நடத்தப்படும் பல நிகழ்ச்சிகளில் அரசாங்கத்தின் விதிமுறைகள் பின்பற்றபடவில்லை என்றும் தனிமனித இடைவெளிகள் பின்பற்றப்படவில்லை என்றும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த விமர்சனங்களை எல்லாம் பிக்பாஸ் கடந்து வருமா என இனி வரும் காலங்களில் தான் தெரியும்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி குறித்த பல சந்தேககங்களுக்கு இன்னும் சில மணி நேரத்தில் பதில் கிடைக்கப்படுகிறது.




