நேற்று இரவு சென்னை காவேரி மருத்துமனையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

தமிழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரஜினிகாந்தின் ரசிகர்கள் இது குறித்து பரபரப்பான நிலையில், “இது வழக்கமான ஒரு ஹெல்த் செக்கப்தான். பயப்படத் தேவையில்லை” என்றார் லதா ரஜினிகாந்த். தொடர்ந்து “வருஷத்துக்கு ஒரு முறை அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அதன்படி முழு உடல் பரிசோதனைக்காக அனுமதியாகியுள்ள அவர், ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் தங்கியிருப்பார். பின் வீடு திரும்புவார்” எனத் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.
மருத்துவமனையில் ரஜினிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட பல உடல்பரிசோதனைகள் நடந்ததில், எதிர்பாராதவிதமாக அவருக்கு ரத்தக் குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (Necrosis) எனப்படும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்திற்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதயத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வழக்கமான பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரஜினியின் மனைவி தெரிவித்துள்ளார். மருத்துவமனை ரஜினிக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட பல உடல்பரிசோதனைகள் நடந்ததில், எதிர்பாராதவிதமாக அவருக்கு ரத்தக் குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவமனையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, ரத்தக் குழாய்களில் படியும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றலை உடல் இழக்கும்போது நெக்ரோசிஸ் (Necrosis) எனப்படும் இந்தப் பாதிப்பு ஏற்படும் என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கிறது. ரஜினிகாந்திற்கு ஏற்பட்டுள்ள ரத்த நாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், நரம்பியல் மற்றும் இருதயத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன. ஏற்கெனவே ரஜினிகாந்த் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துள்ளதால், பிற உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “வழக்கமான பரிசோதனைக்காகத்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ரஜினியின் மனைவி தெரிவித்துள்ளார். மருத்துவமனை நிர்வாகத்துடன் நாங்களும் பேசினோம். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தேறி வருகிறது. சில நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




