நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 9ம் தேதி வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாக்டர் படத்தின் ஒட்டுமொத்த விற்பனை மற்றும் வசூல் குறித்த தகவல்களைப் பார்க்கலாம்…
படத்திற்கான பட்ஜெட் 45 கோடி ரூபாய், விநியோகத்திற்கான செலவு ரூ.1 கோடி, விளம்பர தொகை – 2.50 கோடி ரூபாய், தயாரிப்பிற்காக வாங்கி கடன் தொகைக்காக கடந்த 2 ஆண்டுகளாக கட்டப்பட்ட வட்டி தொகை 15 கோடி ரூபாய் ஆக ஒட்டுமொத்தமாக 63.50 கோடி ரூபாய் படத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் மூலமாக மட்டுமே டாக்டர் படம் இதுவரை 30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் 50 லட்சமும், கர்நாடகாவில் 75 லட்சம் வசூலாகியுள்ளது. கோல்ட்மைன் டெலிபிலிம் என்ற நிறுவனத்திற்கு இந்தி டப்பிங் ரைட்ஸ் 4 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. டாக்டர் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் சன் பிக்சரஸ் நிறுவனத்திற்கு 9 கோடிக்கும், அதேபோல் சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியிட 16 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஆடியோ ரைட்ஸ் 2.50 கோடி ரூபாய்க்கும், தெலுங்கு டப்பிங் ரைட்ஸ் 1.50 கோடி ரூபாய்க்கும், ஓவர்சீஸ் ரைட்ஸ் 4.50 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. ஆக மொத்தம் படத்தின் செலவு ரூ. 63.50 கோடி, வியாபாரம் – ரூ.68.75 கோடி ஆகியுள்ளது. இதன் மூலம் இதுவரை மட்டுமே டாக்டர் பட தயாரிப்பாளருக்கு 5.25 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.