இசையமைப்பாளர் தமன் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல்கள் காப்பி என்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சிம்புவின் கம்பேக் படமான ‘ஈஸ்வரன்’ இந்த பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தமன் தமிழில் சிறிய இடைவெளிக்கு பிறகு ‘ஈஸ்வரன்’ படத்தில் இசையமைத்திருந்தார். மேலும் இவர் நடிகர் விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி65’ல் இசையமைப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் கமிட் ஆனார்.
இதனையடுத்து தெலுங்கில் வெளியான ‘கிராக்’ படத்தின் பாடல்கள் காப்பியடித்தது போல ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல்கள் அமைந்திருக்கிறது என்ற சர்ச்சை எழ தமன் இதற்கு விளக்கமளித்துள்ளார்.
READ MORE- ‘கல்யாணமா அட போங்க’- வெட்கப்பட்ட சிம்பு!
‘வேலை இல்லாதவர்கள் என் மேல் பரப்பும் குற்றச்சாட்டு இது. என் மீது இதுவரை எந்த காப்பி திருட்டு வழக்குகளும் இல்லை. இது தேவையில்லாத ஒன்று’ என காட்டமாக பதிலளித்துள்ளார்.




