முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் இன்று தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
ஐஸ்வர்யா ராய் கர்நாடகாவில் உள்ள மங்களூரு நகரில் 1973 ஆம் ஆண்டு நவம்பர் 1 தேதி பிறந்தார். இவருடைய தந்தை கிருஷ்ணராஜ், தாயார் பிருந்தா. இவரது மூத்த சகோதரர் ஆதித்யா ராய் வணிக கடற்படையில் பொறியாளராக உள்ளார். இவர்களது குடும்பம் கர்நாடகாவில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தனர். ஐஸ்வர்யா அங்குதான் தன பள்ளி படிப்பை மேற்கொண்டார். தனது எட்டு வயதிலேயே இவரது மாடலிங் பயணம் ஆரம்பித்து விட்டது.
மிஸ் இந்தியா:
1994 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தை பெற்றார். இதில் பிரபல நடிகை சுஷ்மிதா சென் முதலிடத்தை பெற்றார்.
உலக அழகி ஐஸ்வர்யா ராய்:
அதிலிருந்து தனது கடும் முயற்சியினால் அதே ஆண்டு நடைப்பெற்ற உலக அழகி போட்டியில் பங்கேற்று தனது 21 வது வயதில் உலக அழகி என்னும் பட்டதைப் பெற்றார்.
ஐஸ்வர்யா ஒரு பேரழகி:
ஐஸ்வர்யா ராய்க்கு பிறகு இந்தியாவில் எத்தனை பேர் அந்த பட்டத்தை பெற்றிருந்தாலும் இன்று வரை அவர் மட்டுமே நம் நாட்டின் நிறைந்த உலக அழகியாக இருக்கிறார். இதற்கு காரணம் இவரது வசீகரிக்கும் முகம் மற்றும் உடல் கட்டமைப்பு ஆகும். மேலும் இவருக்கென்று தனித்துவமாகவும் பேரழகாகவும் இருப்பது இவரது நீலம் மற்றும் பச்சை கலந்த கருவிழிகள் என இவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் முதன்முறையாக தமிழ் திரையுலகிற்கு மணிரத்னம் மூலம் இருவர் படத்தில் நடிக்க அழைத்து வரப்பட்டார். அதன்பிறகு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ரோபோ போன்ற நேரடி தமிழ்ப்படங்களில் நடித்தார்.
இந்தி திரையுலகிலும் ஐஸ்வர்யா ராய் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களே. 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஹம் தில் தே சுகே சனம் என்னும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றார். தேவ்தாஸ் மற்றும் குரு திரைப்படத்திற்காகவும் பிலிம் பேர் விருது பெற்றார்.
சாதனைகள்:
1.பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலக அழகி ஐஸ்வர்யா ராய் ஆவார்.
2.2004 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா உலக அலங்காவில் மக்களை அதிகம் கவர்ந்து இழுத்த பெண்களின் பட்டியலை தயார் செய்தனர் இந்த பட்டியலில் ஐஸ்வர்யா ராயின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
3.உலக புகழ் பெற்ற பார்பி பொம்மை நிறுவனம் ஐஸ்வர்யாராயின் முக அமைப்பை போன்ற பொம்மைகளை தயார் செய்து விற்க தொடங்கியது.
4.அமெரிக்காவின் உலக புகழ் பெற்ற நிகழ்ச்சி ஒன்றை ஓப்ரா வின் என்பவர் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முதன் முதலில் பங்குபெற்ற இந்திய பெண்மணி ஐஸ்வர்யா ராய் ஆவார்.
5.லண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முதலாக ஒரு இந்திய பெண்மணியின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டது என்றால் அது ஐஸ்வர்யா ராயின் மெழுகுச்சிலை தான்.
6.சிறுகுழந்தைகளை எச் ஐ வி பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் யுனைடெட் நேஷனின் திட்டத்திற்கு இவர் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார். தனது பணிகளையும் சிறப்பாக செய்தார்.
7.உலக புகழ்பெற்ற கான்ஸ் திரைப்பட விழாவின் ஜூரிகளில் ஒருவராகவும் ஐஸ்வர்யா இருக்கிறார்.
இவரை சூழ்ந்துள்ள சர்ச்சைகள்:
சாதனை மனிதர்களை சர்ச்சைகள் ஒரு நாளும் விட்டு போவதில்லை இவர்களது அன்றாட வாழ்க்கை மீடியாவினால் உற்றுநோக்கப்படுகிறது.
உலக அழகி ஐஸ்வர்யா ராயை சுற்றியும் பல சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன.
ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகே இந்தியாவில் அதிக அளவில் அழகு சாதன பொருட்கள் சந்தைக்கு வர தொடங்கின. சருமத்தை வெள்ளையாகும் முக பூச்சுகள் என விளம்பரங்கள் வரத் தொடங்கின. இந்தியாவில் பல அழகுசாதன பொருட்களுக்கு ஐஸ்வர்யாராய் தான் பிராண்டு அம்பாஸ்டராக இருக்கிறார்.
சல்மான் கான் உடனான காதல்:
1999ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுடன் காதலில் இருந்தார். இவர்களது காதல் வாழ்க்கை பற்றி பேசாத ஊடகங்களே இல்லை எனலாம். பின்பு இந்த உறவு 2001ஆம் ஆண்டு பிரிந்தது. அதன் பிறகு ஐஸ்வர்யா தான் சல்மான்கானால் மிகவும் துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். அதனை சல்மான்கான் மறுத்து விட்டார்.
இதன் பிறகு விவேக் ஓபராய் உடன் ஐஸ்வர்யா ராய் காதலில் இருப்பதாக கிசு கிசுக்கப்பட்டது. இதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்க்கிறார்கள். அன்றைய காலக்கட்டத்தில் கரிஷ்மா கபூரும் அபிஷேக் பச்சனும் காதலித்து இவர்களது திருமணம் நிச்சயதார்த்தம் வரைக்கும் சென்று பின்பு ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.
அதன்பிறகு குரு திரைப்பட சமயத்தில் அபிஷேக் பச்சன் கனடாவில் ஒரு ஹோட்டல் பால்கனியில் வைத்து ஐஸ்வர்யா ராய்க்கு ப்ரபோஸ் செய்ததாகவும் ஐஸ்வர்யாவும் உடனே ஒப்புக்கொண்டதாகவும் ஒரு பேட்டியில் அபிஷேக் பச்சன் கூறியிருந்தார்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி இருவருக்கும் பண்ட் முறைப்படி திருமணம் நடைப்பெற்றது.
பாலிவுட்டில் ஸிரோ பிகர் என்னும் மெல்லிய இடை அமைப்பு தான் மிகவும் பிரபலமான ஒன்று தற்போது இது தென்னிந்திய சினிமா கலாச்சாரத்திலும் வந்துவிட்டது ஐஸ்வர்யாராயும் இந்த இடை அமைப்பை கொண்டவரே ஆனால் இவர் தன்னுடைய மகப்பேறு காலத்திலும் குழந்தை பிறந்த பிறகும் அதிக அளவில் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ரசிகர்களை அதிர்ச்சிக்குளாக்கினார்
ஐஸ்வர்யா ராய் இதற்காக ஓடி ஒளியாமல் மிகவும் தன்னம்பிக்கையுடனும் கம்பீரத்துடனும் கேமெரா முன் வந்து நின்றார். ஐஸ்வர்யாவின் சினிமா வாழ்க்கை அவ்வளவு தான் என மீடியாக்கள் எழுத ஆரம்பித்திருந்த நிலையில் முன்பை விட ஸ்லிம்மாகவும் இளமையாகவும் கம் பேக் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்.