சக்திமான் புகழ் முகேஷ் கண்ணா பெண்கள் குறித்து பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது.

90’s கிட்ஸ்களின் பேவரைட் சீரியல் சக்திமான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான சீரியல். இந்த சீரியலை படமாக எடுக்க சோனி நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த நிலையில் சக்திமான் சீரியலின் கதாநாயகன் முகேஷ் கண்ணா, பீஷ்ம் இண்டர்நேஷனல் என யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பெண்கள் குறித்து அவர் பதிவிட்டுள்ள வீடியோ பெரும் சர்ச்சையாகி உள்ளது.
அந்த வீடியோவில், ஆண்களிடம் தாமாக முன்வந்து உடலுறவு வைத்துக்கொள்ள கேட்கும் பெண்கள் பெண்களே அல்ல. அவர்கள் வணிகநோக்கத்திற்காக அதனை கேட்பதாக கூறியுள்ளார். மேலும், வாட்ஸ் அப்பில் தனக்கும் இதுபோன்ற செய்திகள் வருவதாக கூறிய முகேஷ் இதுபோன்ற பெண்கள் உண்மையில் இருந்தால் அந்த சமூகம் நிச்சயம் வீழ்ச்சியை சந்திக்கும். தனது இளமை காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்தேன். அப்போது பெண்களே வேண்டாம் என முடிவுசெய்தேன். தற்போதைய நிலைமை ஆண்கள் வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது என்று கூறுகிறார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.




