பொன்னியின் செல்வன் படத்தின் இசை டிரெய்லர் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாகிறது. இதில், நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா, ஜெயராம், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், செப்டம்பர் 6ம் தேதி படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாய் நடக்கவிருக்கிறது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் கலந்து கொள்ள இருக்கின்றனர்.