நல்ல மணப்பெண்ணுக்காக காத்து இருக்கிறேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் இதுக்குறித்து பேசிய அவர், “ரஜினி, அஜித்,விஜய் என்று யாருடன் வேண்டுமானாலும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன். எனது திருமணம் குறித்து யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அது நடக்கிற நேரத்தில் நடக்கும். நிறைய 2வது, 3வது திருமணங்கள் நடக்கின்றன. சிலர் காதலித்து விட்டு பிறகு பிரிகிறார்கள். விவாகரத்துகளும் நடக்கின்றன. இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. எனவே, இது மாதிரி பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நல்ல மணப்பெண் அமையும் வரை காத்திருப்பதில் தவறில்லை. நல்ல மணப்பெண்ணுக்காக காத்திருக்கிறேன்.
ஒரு படத்தில் நடித்து முடித்தப்பின் தான் அடுத்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். முத்தக்காட்சிகள், புகைப்பிடிக்கும் காட்சிகள், நெருக்கமான காட்சிகள் போன்றவற்றை என் படங்களில் திணிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். விரைவில் படம் டைரக்டு செய்வேன். இதற்காக, 10 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன்” என்று கூறினார்.