கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்து வருகிறார் தனுஷ்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இன்று தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ‘நானே வருவேன்’ படப்பிடிப்பு துவங்கியுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இயக்குநர் செல்வராகவன், தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் பத்தாண்டுகளுக்கு பிறகு ‘நானே வருவேன்’ படத்தில் மீண்டும் இணைய உள்ளனர். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் போட்ட ட்வீட் ஒன்று அஜித்குமார் ரசிகர்களை கடுப்பாக்கியுள்ளது. அதாவது தனது பதிவில் ஒரே ஒரு தல தோனி என அவர் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்து கோபமான அஜித்குமார் ரசிகர்கள் தனுஷை திட்டி ஹேஸ்டாக் டிரெண்ட் செய்து வருகினறனர். ரசிகர்களால் தல என அழைக்கப்படும் அஜித்தை இழிவு செய்யும் விதமாகவே தனுஷ் வேண்டுமென்றே பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி பதிவிட்டு வருகின்றனர்.