முன்னனியில் இருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்திருக்கும் படம் தான் ‘எமர்ஜென்சி’. இந்திரா காந்தியின் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த படத்தில் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசை மெட்டுகளை கோர்க்கும் இப்படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா என்பவர் எழுதி இருக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘எமர்ஜென்சி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படம் வருகிற நவம்பர் 24-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை ‘எமர்ஜென்சி’ படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.