தமிழகத்தில் சாதியின் வழி இயற்றப்பட பாடல்களை பொதுவெளியில் ஒலிபரப்ப தடை விதிக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது சார்பாக இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது;- “தமிழகத்தில் சாதியின் பெயர் கொண்ட பாடல்கள் சினிமா, தனி இசை பாடல்கள் எதுவாயினும் அவற்றை பொது ஒலிப்பெருக்கிகளில் பொதுவிடத்தில் ஒலிபரப்பத் தடைவிதிக்க உத்தரவு இட வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். எவர் பாடல்களிலும் உசுப்பேற்றும் சாதிய துவேஷம் மறைமுகமாக இருந்தாலும் கூட தணிக்கை தடை விதித்தல் செய்திட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகிறேன்” என அவர் சமூக நல நோக்கில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.