திரையரங்குகள் திறக்கப்படும்போது, சூழலைப் பொறுத்து, கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரிக்கத் தொடங்கிய பின் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. தற்போது வரை 5 வது கட்டமாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் 200 நாட்களுக்கு மேல் மற்ற தொழில்துறையினருடன் சினிமாதுறையினரும் கடுமையாக பாதிகப்பட்ட நிலையில் சமீபத்தில் மத்திய திரையரங்கு திறப்பது குறித்து அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தும் அப்படி திறந்தால் எத்தனை காட்சிகளுக்கு அனுமதி என்பது குறித்தும் பலத்த கேள்விகள் எழுந்தன.
இதற்கு இன்று பதிலளித்துப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, திரை
யரங்குகள் திறக்கப்படும்போது, சூழலைப் பொறுத்து, கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர்கள் சம்பளம் குறைப்பு தொடர்பான விவகாரத்தில் அரசு தலையிடாது என்றும், சினிமாத்துறையினரே பேசி முடிவு செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.




