வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் ‘தல’அஜீத் குமாரின் ஐம்பதாவது திரைப்படமாக உருவானது மங்காத்தா. இந்த படத்தில் தமிழ் பட ஹீரோக்கள் யாரும் எடுக்காத முயற்சியாக அஜித் முழுவதும் வில்லனாக நடித்து இருப்பார்.

இந்த படம் ரசிகர்களால் வெறித்தனமாக கொண்டாடப்பட்டது. இத்திரைப்படம் தமிழகத்தில் பட்டி தொட்டியெல்லாம் சிறப்பான வரவேற்பினை பெற்றது. அந்த ஆண்டின் சிறந்த வில்லன் விருது கொடுத்து விஜய் அவார்ட்ஸ் கௌரவித்தது.
எப்போதும் தல அஜித்குமாரின் எந்த படம் வெளியானாலும் சரி மங்காத்தா-2 எப்போது உருவாகும் என்பதே ரசிகர்களின் பலரின் கேள்வியாக இருந்துவருகிறது. ஏன் என்றால் ரசிகர்களுக்கு அவ்வளவு ட்ரீட் கொடுத்த திரைப்படம் இதுவாகும்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் மங்காத்தா குறித்து பதிலளித்துள்ள வெங்கட்பிரபு, “எப்போதுமே என்கிட்ட மங்காத்தா-2 குறித்த அப்டேட்களை கேட்டு நிறைய வருகிறார்கள்.

முதலில் அவர் வலிமை திரைப்படத்தை முடிக்கட்டும். தல அஜித் எப்போதுமே ஒரு படத்தை ஃபுல்லா கமிட் ஆகிட்டு பண்ணி முடிக்காம அடுத்த படத்துக்கான தயாரிப்பாளரையும் இயக்குனரையும் தேர்ந்தெடுக்க மாட்டார். தன்னுடைய கையிலிருக்கும் படத்தை முழுவதுமாக முடித்து கொடுத்துட்டு, அது 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் மட்டும் தான் அடுத்த திரைப்படத்தில் கமிட் ஆவார் என்றும் கூறினார். மேலும் மங்காத்தா-2 அமையும் போதுதான் அமையும்” எனத் தெரிவித்துள்ளார்.




