பிரபல நடிகை நக்மா வெளியிட்ட வைரல் வீடியோ விவகாரம் தவறான தகவல்
பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான நடிகை நக்மா தனது டுவிட்டரில் பதிவிட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய சினிமாவில் தமிழ் உள்ளிட்ட பலமொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நக்மா. இவர்ட் நடிகை ஜோதிகாவின் அக்கா ஆவார்.
இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டு,அதில், மறைந்த முன்னாள் பிர்தமர் வாய்பாய் மருமகள் தனது அமைதியை இழந்துவிட்டார் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அந்த வீடியோவில் இருப்பது வாஜ்பாயின் மருமகள் இல்லையென்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் இருப்பது சமூக ஆர்வலர் அதியா ஆல்வி எனபவர். எனவே நக்மா பதிவிட்ட வீடியோவில் இருப்பது வாஜ்பாயின் மருமகள் இல்லையென்பதால் போலி செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது