நடிகை நஸ்ரியா தற்போது 1.90 கோடிக்கு புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கேரளாவை சேர்ந்த நடிகை நஸ்ரியா தமிழ், தெலுங்கு, மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தனது இயற்கையான அழகினாலும் குறும்பான நடிப்பினாலும் இளைஞர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டார். உச்சத்தில் இருக்கும் பொழுதே மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட ஏற்று நடிக்கும் பகத் பாசில் தமிழில் வேலைக்காரன் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
நடிகை நஸ்ரியாவும், அவரது கணவரும் ஒரு புதிய காரை வாங்கியுள்ளனர். தற்போது பகத் பாசில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அந்தக் காரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தக் காரின் விலை ரூ.1.90 கோடியாம்.
பச்சை நிறத்தில் இருக்கும் இந்த காருடன், பகத் மற்றும் நஸ்ரியா ஜோடியாக சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோவையும் அவர் ஷேர் செய்துள்ளார். தற்போது இந்த போட்டோ இன்டர்நெட்டில் வைரல் ஆகி வருகிறது.




