நேர்கொண்ட பார்வை வந்து ஒரு வருடம் ஆவதை நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அஜித் உடன் நடித்தது பற்றி நினைவு கூர்ந்துள்ளார்.

ரஜினியின் பேட்டை யுடன் களமிறங்கி சூப்பர் ஹிட் ஆன விஸ்வாசம் படத்திற்குப் பிறகு தல அஜித்நடித்து கடந்த வருடம் ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியான படம்நேர்கொண்ட பார்வை. இதனை சதுரங்க வேட்டை, வீரன் அத்தியாயம்-1 போன்ற படங்களை டைரக்ட் செய்த ஹெச் வினோத் இயக்கியிருந்தார்.
தற்போது அஜித் நடித்துக்கொண்டிருக்கும் வலிமை படத்தையும் இவரே இயக்கிக் கொண்டிருக்கிறார் குறிப்பிடத்தக்கது
நேர்கொண்ட பார்வை:
இது இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளியான பிங்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்
ஒருத்தர் மேல விசுவாசத்தை காட்டுவதற்காக இன்னொருத்தர ஏன் அசிங்கபடுத்துறீங்க NO MEANS NO , போன்ற வசனங்கள் மிகவும் பிரபலம் அடைந்தது .வழக்கமாக மாஸ் ஹீரோ அந்தஸ்தில் இருப்பவர்கள் இது போன்ற படங்களில் நடிக்கத் தயங்குவார்கள். ஆனால் எந்தவித தயக்கமும் இல்லாமல் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தில் வயதான வழக்கறிஞர் வேடத்தில் அவருக்கே உரித்தான பாணியில் சிறப்பாக நடித்திருந்தார் இதனால் சக நடிகர் நடிகைகளிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமே இருந்தது
ஷ்ரத்தா ஸ்ரீநாத் நெகிழ்ச்சி :
கடந்த வருடம் ஆகஸ்ட் எட்டாம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது. இன்றுடன் ஒரு வருடம் கடந்து விட்டதால் அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகிறார்கள் மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்நடித்திருந்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நேர்கொண்ட பார்வை படம் பற்றி அவருடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

தியேட்டரில் அஜித் ரசிகர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
“அந்த சத்தம் தன் காதுகளில் இன்னும் கேட்டு கொண்டிருக்கிறது. தல ரசிகர்களுக்கு தன் அன்பார்ந்த நன்றி என்றும் பதிவிட்டுள்ளார்
மேலும் படத்தில் வரும் ஒரு காட்சியின் புகைப்படத்தை பதிவிட்டு அஜித் பற்றி அவர் பேசி இருக்கிறார். “ஒரு பெரிய நடிகர் தன் முன்னிருக்கும் அனைத்து தடைகளையும் புறம் தள்ளிவிட்டு தைரியமாக இப்படி ஒரு படத்தில் நடித்திருக்கிறார்.
நாம் வெளிப்படையாக பேசத் தயங்கிய பல விஷயங்கள்வி பற்றி இந்தப் படம் ஆராய்ந்து அலசியது தல உடன் நடித்தது எனக்கு மிகுந்த பெருமிதம்”என தெரிவித்து இருக்கிறார் .





