நிர்வாண படம் கேட்ட ரசிகருக்கு பிரியாமணி அளித்த பரபரப்பான பதில் கொடுத்துள்ளார்.

நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் ஏராளமான ஹிட் கொடுத்துள்ளார். 2007-ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பருத்தி வீரன் படத்தில், தனது சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதையும் வென்றுள்ளார்.
சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரியாமணி, சமீபத்தில் ஃபிலிம்ஃபேர் விருதுகள் நிகழ்விற்காக கருப்பு நிறத்தில் ஸ்டைலான உடை மற்றும் ஸ்டன்னிங்கான அலங்காரத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டார்.
அந்தப் படங்களைப் பார்த்த ரசிகர் ஒருவர், பிரியாமணியிடம் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுங்கள் என்றார். இதைப் பார்த்து கோபமான பிரியாமணி ”முதலில் உனது தாய், சகோதரியிடம் இதை கேள், அவர்கள் செய்தால், அதன்பிறகு நானும் பதிவிடுகிறேன்” என்று தெரிவித்தார். நெட்டிசனுக்கு பதிலடி கொடுத்த பிரியாமணியின் இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




