அஜித்குமார் நடித்த அமர்க்களம் திரைப்படம் 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக அப்படத்தின் இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார். அஜித் குமார், ஷாலினி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அமர்க்களம். காதல் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது. இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்து அது திருமணத்தில் முடிந்தது. இப்படத்தில் இடம்பெற்ற, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. சொந்தக்குரலில் பாட ரெம்ப நாளா ஆசை என்ற பாடலையும் இப்படத்தில் ஷாலினி பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.




