தெலுங்குப் படம் ஒன்றில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் சாய் பல்லவி.

தமிழகத்தைச் சேர்ந்த சாய் பல்லவி, மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் நடித்து புகழ்பெற்றார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து ராசியான நடிகை என்று பெயரெடுத்தார். தமிழில் என்ஜிகே, மாரி-2 உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கில் பிடா ஆகிய படங்களிலும் நடித்து முன்னணி நடிகை என்று பெயர் பெற்றார்.
ஆனால் அவருக்கு தற்போது மார்க்கெட் நிலவரம் சரியாக இல்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் என்ற எந்த மொழிகளிலும் அவருக்குப் படம் இல்லையாம்.
இதனால் படவாய்ப்புக்காகக் காத்திருந்தார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் அவருக்கு தங்கை வேடத்தில் சாய் பல்லவியை ஒப்பந்தம் செய்துள்ளனராம்.
இந்தப் படம் தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக் என்று தெரியவந்துள்ளது.




