கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் பல திரைப்படங்களில் நாயகியாகவும், தற்போது குணசித்திர நடிகையாகவும் நடித்து வருபவர் சரண்யா.

இந்த நிலையில் சரண்யாவின் தந்தையும் பிரபல மலையாள இயக்குனருமான ஏ.பி.ராஜ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 95. அவர் தமிழில் ‘துள்ளி ஓடும் புள்ளிமான்’, ’கை நிறைய காசு’ மற்றும் 50க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களையும் இயக்கியவர். இவர் சிங்கள மொழியிலும் திரைப்படங்கள் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் மலையாள இயக்குனர் ஏபி ராஜ் காலமானதை அடுத்து மலையாள திரையுலகினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.




