‘டான்’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த சிவாங்கி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை ‘குக் வித் சிவாங்கி’ நிகழ்ச்சியாகவே பார்க்கத்தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள். அந்தளவிற்கு காமெடியில் அதகளம் செய்து அசத்தி வருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ‘சிவாங்கிக்காகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்கிறோம்’
விஜய் டிவியின் ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இனிமையான குரலால் பாடல்களைப் பாடி மனம் விட்டு சிரிக்கவும் வைத்தவர் காமெடியில் கலக்கும் பெண்கள் மிகவும் குறைவு. இளம்வயது பெண்களை விரல்விட்டுக்கூட எண்ண முடியாத அளவிற்குதான் இருக்கிறார்கள். பெண்களாலும் காமெடி செய்ய முடியும்; அதுவும், இளம் பெண்களுக்கும் காமெடி வரும் அவர்களும் காமெடியில் கலக்குவார்கள் என்பதை சிவாங்கி நிரூபித்திருக்கிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் ’நான் சிவாங்கியின் ஃபேன்’ என்று சொல்லி ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ‘டான்’ படத்தில் சிவாங்கி நடிக்கவும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருப்பதால், சிவாங்கி ரசிகர்கள் ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார்.