தமிழ் திரைப்படத்தில் விரும்புகிறேன் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆகியவர் நடிகை சினேகா முதல் படமே ஒரு கிராமத்து பின்னணி கதை அம்சம் கொண்ட மற்றும் மணிரத்தனத்தின் சீடரான சுசிகனேசன் திரைப்படம் என்பதால் சினேகாவிற்கு நடிப்பிற்கு நல்ல தீனியாக அமைந்த திரைப்படமாக இருந்தது.

பிறகு தொடர்ந்து ஆனந்தம், வசீகரா, ஜனா என முன்னணி நடிகர்கள் அனைவரிடமும் ஜோடி போட்டுவிட்டார் மேலும் கோவா படத்தில் வில்லி வேடத்திலும் நடித்துவிட்டார், தமிழ்நாடு ரசிகர்களிடம் புன்னகை அரசி என்ற பெயரை வாங்கிய சினேகா திரைப்பட நடிகரான பிரசன்னாவை காதலித்து மணந்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த சினேகாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் சினேகா தனது மகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் தன் குடும்பத்துடன் இருக்கும் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார் இப்போது அதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்





