கருப்பன் குசும்புக்காரன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகர் தவசி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மெலிந்து போயுள்ளார்.
திரை உலகில் நம்மை சிரிக்க வைக்கும் பல நடிகர்களின் உண்மையான வாழ்க்கை முறை என்ன என்பது ரசிகர்கள் ஆன நம்மில் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. சினிமா காட்சிகளில் கோடீஷ்வரர்களாக தோன்றும் பலர், மூன்று வேளை சோற்றுக்கு கூட கஷ்டப்படும் நிலையிலேயே இன்றும் உள்ளனர்.
பிரபல வில்லன் நடிகரான பொன்னம்பலமும் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணமின்றி தவித்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் அவருக்கு உதவிக்கரம் நீட்டியதை பலரும் அறிந்ததே.
இந்நிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில், சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த தவசி கூறிய, “கருப்பன் குசும்புக்காரன்” எனும் வசனம் பலராலும் பாராட்டப்பட்டு ரசிக்கப்பட்டது.
இவர் பாரதிராஜாவின், ‘கிழக்குச் சீமையிலே’ படத்திலிருந்து தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் ஆவார். கிடா மீசையில் பல படங்களில் நடித்து வந்த தவசி, ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் கூட நடித்துள்ளதாக கூறபடுகிறது.
இந்த சூழலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசி, மிகவும் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தவசி குறித்து பேசும் அவரது உறவினர், புற்றுநோய் பாதிப்பால் தவசி அவதிப்படுவதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்திருக்கிறார். நடிகர் தவசியின் மகன் சமூக வலைதளத்தில் பண உதவி கேட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். இதனை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.