பெண் குழந்தை ஒன்றை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது கையில் தூக்கி வைத்திருக்கும் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யாரிந்த குழந்தை என்று ஆச்சர்யத்துடன் ரசிகர்கள் அந்த போட்டோவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் பல பிரபலங்கள் தங்களது பழைய கால படங்களை இணையத்தில் வெளியிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர். அண்மையில் ரஜினிகாந்த் பெண் குழந்தையை தூக்கி வைத்திருக்கும் படம் வெளியானது.
யாரிந்த பெண் குழந்தை என்று யோசித்தவர்கள் உற்றுநோக்கும்போது அதை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டனர். அவர்தான் பின்னணிப் பாடகி அனுராதா ஸ்ரீராம்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 2,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் பிரபல பாடகி அனுராதா ஸ்ரீராம். 1970ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பிறந்த அனுராதா ஸ்ரீராம் சினிமா பின்னணி பாடகி மட்டுமல்லாமல் அவர் ஒரு கர்நாடக இசை பாடகியாகவும் பரிமளித்து வருகிறார்.
1995-ம் ஆண்டில் இருந்து சினிமா பாடல்களைப் பாடிவரும் அனுராதா ஸ்ரீராமுக்கு தற்போது 50 வயதாகிறது.
இந்தப் படமானது நடிகர் ரஜினிகாந்த், காளி படத்தில் நடிக்கும்போது எடுத்ததாகும். இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் சிறுமியாக அனுராதா ஸ்ரீராமும், சிறுவனாக காஜா ஷெரீப்பும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




