எம்.ஜி.ஆர் மகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியிருக்கும் குடும்ப பொழுதுப்போக்கு திரைப்படம் எம்ஜிஆர் மகன். சத்யராஜும், சசிகுமாரும் அப்பா, மகனாக நடித்துள்ளனர். அப்பா, மகனுக்கிடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சனை எப்படி சுபமாக முடிந்தது என்பது படத்தின் ஒருவரி கதை. இந்தப் படத்தை ஏப்ரல் 23-ம் தேதி திரையரங்கில் வெளியிடுவதாக முறைப்படி அறிவித்தனர்.
திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அரசின் நேற்றைய அறிவிப்பு அனைத்தையும் மாற்றியது. இரவு பத்து மணிமுதல் காலை நான்கு மணிவரை ஊரடங்கு என கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், படவெளியீட்டை தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Read more : தமிழில் கதாநாயகியாக நடிக்கும் சன்னி லியோன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு…!!
“எம்ஜிஆர் மகன்’ திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள். ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.எம்ஜிஆர் மகன் பட வெளியீட்டை தள்ளி வைப்பதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மே 14-ம் தேதி வெளியாவதாக இருந்த சிவகார்த்திகேயனின் ’டாக்டர்’ உள்ளிட்ட பல படங்கள் வெளியீட்டை தள்ளிப்போடும் நிலை ஏற்பட்டுள்ளது.