துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
தல அஜித் தமிழ் சினிமாவின் ஒரு முக்கிய நபராக விளங்கி வருகிறார். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.தல அஜித் சமீபத்தில் நான் சினிமாவில் மட்டுமல்ல, எனக்கு பிடித்த மற்ற பல விஷயங்களிலும் இனி கவனம் செலுத்து இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
அந்த வகையில் அஜித் இருசக்கர வாகனம் ஓட்டுவதிலும் பெருமை வாய்ந்தவர். விமான ஓட்டுவதில் பயிற்சி பெற்று வந்திருந்தார். இந்நிலையில் தல அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார்.
அதில் தற்போது சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க மெடல் வென்றுள்ளார்.நடிகர் அஜித் தங்கம் வாங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.