டாப் ஹீரோயின் ப்ரியங்கா சோப்ரா வெளியிட்ட பிரமாண்ட பட இயக்குநர் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
உலக அழகி பட்டம் வென்ற ப்ரியங்கா சோப்ரா விஜய்யின் தமிழன் படம் மூலம் நடிகையானார். அந்த படத்தில் நடித்ததுடன் ஒரு பாட்டும் பாடியிருந்தார். பாலிவுட்டின் முன்னணி ஹீரோயினான பிறகு ப்ரியங்கா ஹாலிவுட் சென்று வெற்றிகரமான நடிகையாக இருக்கிறார். அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸை காதலித்து திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில், தன் சுயசரிதையை புத்தமாக எழுதி வெளியிட்டுள்ளார். கடந்த 9ம் தேதி வெளியான Unfinished என்கிற அந்த புத்தகத்தின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
உலக அழகிப் பட்டம் வென்றது, விஜய்யுடன் சேர்ந்து நடித்தது, விஜய்யின் நல்ல குணங்களை பார்த்து வியந்தது, பாலிவுட், ஹாலிவுட் அனுபவம் பற்றி அந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறார் ப்ரியங்கா. உலகப் புகழ் பெற்ற நடிகையாக இருந்தாலும் தன் முதல் பட ஹீரோவை பற்றி மறக்காமல் எழுதியிருக்கும் ப்ரியங்கா சோப்ராவை விஜய் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். இந்நிலையில் அந்த புத்தகத்தில் அவர் எழுதியிருக்கும் ஒரு குறிப்பிட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ப்ரியங்கா தன் புத்தகத்தில் கூறியிருப்பதாவது, நான் நடிக்க வந்த புதிதில் பெரிய பாலிவுட் படம் ஒன்றில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆட வேண்டியிருந்தது. அந்த பாடலில் நான் என் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற வேண்டும். பாடல் மிகவும் நீளமாக இருந்ததால் நான் நிறைய ஆடைகளை அணிகிறேன். இல்லை என்றால் சீக்கிரமே நான் ஆடையில்லாமல் இருக்க வேண்டி வரும் என இயக்குநரிடம் கூறினேன். அந்த இயக்குநர் என் ஸ்டைலிஸ்ட்டிடம் கூறியதாவது, என்ன நடந்தாலும் சரி, பேன்டீஸ் தெரிய வேண்டும். இல்லை என்றால் மக்கள் எதற்காக படம் பார்க்க வரப் போகிறார்கள் என்றார். இயக்குநர் பேசியதை கேட்ட பிறகு நான் அந்த படத்தில் இருந்து விலக முடிவு செய்தேன். அப்பொழுது தான் சல்மான் கான் இதில் தலையிட்டார். என் சக நடிகர் சல்மான் கான் இந்தியாவின் பெரிய ஸ்டார், என் நிலைமையை புரிந்து கொண்டு, எனக்காக பேசினார். பிறகு தயாரிப்பாளர் என்னிடம் சாந்தமாக பேசினார் என ப்ரியங்கா தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.