நடிகை திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரமபதம் விளையாட்டு. இந்த படம் திரிஷாவின் 60 வது படமாகும் . அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் நந்தா, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் வருகிற தமிழ் புத்தாண்டில் அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீசாகிறது. திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பொலிட்டிக்கல் திரில்லர் படமான பரமபதம் விளையாட்டு படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலில் உள்ளனர்