சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்படுபவர் என்றால் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்லும் ஒரே பெயர் வனிதா விஜயகுமார்தான்.
அப்படி பேச முக்கிய காரணம் அவர் சமீபத்தில் செய்துகொண்ட திருமணம்தான். விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் என்பவரை கடந்த 27-ம் தேதி திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமணத்தில் இருந்து சர்ச்சைகள் பெரும் அளவில் கிளம்ப ஆரம்பித்தன பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னிடம் விவாகரத்து பெறாமலேயே இத்திருமணம் நடைபெற்றதாக போலீசில் புகாரளித்தார். இதுகுறித்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா – பீட்டர் பால் மறுமணம் குறித்து சமூகவலைதளங்களில் பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். பீட்டர்பாலின் முதல் மனைவிக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் பதிலடி கொடுத்தார் வனிதா விஜயகுமார்.
வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.